ICC டி20 உலகக்கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு(ICC T20 World Cup)

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் கொரோனா பாதிப்பு காரணமாக 2022 ஆம் ஆண்டு நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. (ICC T20 World Cup)

இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் இந்த சமயத்தில் போட்டிகளை நடத்துவது கடினம் என்றும் வீரர்களின் உடல்நிலை மிகவும் முக்கியம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், இந்த ஆண்டு நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். (ICC T20 World Cup)

வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளன. (ICC T20 World Cup)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat