ENG vs WI 2nd Test 4th Day: இங்கிலாந்து அணி 219 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகின்றது. முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் மூன்றாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ( ENG vs WI 2nd Test )

மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்ட நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி Follow On முறையை தவிர்க்க பொறுப்புடன் விளையாடி வந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான Brathwaithe 75 ரன்கள் மற்றும் Brooks 68 ரன்களும் குவித்தனர். இருப்பினும் தேனீர் இடைவேளைக்கு பின் மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரோஸ்டன் சேஸ் 51 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் Woakes தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதை தொடர்ந்து மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களுடனும் ரூட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ( ENG vs WI 2nd Test)

நான்காம் நாள் ஆட்டம் கணிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணி :

நான்காம் நாள் ஆட்டம் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடிய மேற்கிந்திய அணி வீரர்கள், ஆட்டத்தின் இறுதியில் பல விக்கெட்டுகளை இழந்தது அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. நான்காம் நாள் ஆட்டம் முழுவதும் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து இருந்தால் இப்போட்டியை சமன் செய்ய உதவியாக இருந்திருக்கும். 

இங்கிலாந்து அணி:

மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் நான்காம் நாள் ஆட்ட நேர தொடக்கத்தில் பொறுமையுடன் விளையாடியது இங்கிலாந்து வீரர்களுக்கு சற்று தலைவலியாக அமைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வைத்து Follow on முறையில் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் செய்ய வைக்கவேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது, இருப்பினும் இங்கிலாந்து அணி நல்ல முன்னிலையிலேயே உள்ளது. ( ENG vs WI 2nd Test)

ஐந்தாம் நாள் ஆட்டம் கணிப்பு:

மேற்கிந்திய தீவுகள் அணி:

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பொறுமையுடன் விளையாடி இப்போட்டியை சமன் செய்வதே மேற்கிந்திய தீவுகள் அணியின் முழு முதல் திட்டமாக இருத்தல் வேண்டும். இங்கிலாந்து அணி 300 ரன்கள் இலக்காக நிர்ணயத்தாலும்  அந்த இலக்கை துரத்த நினைக்காமல் இப்போட்டியை சமன் செய்யவே மேற்குஇந்திய தீவுகள் தீவுகள் அணி வீரர்கள் முயலவேண்டும். ( ENG vs WI 2nd Test)

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கவே திட்டமிடுவர். முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து செய்த தவறுகளை இப்போட்டியில் தவிர்க்க வேண்டும். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் Dom Bess கையில்தான் இங்கிலாந்து அணியின் வெற்றி உள்ளது. அதனால் Dom Bess இன்று நன்றாக பந்து வீசுவது கட்டாயமாகிறது. ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளதால் இங்கிலாந்து அணி இப்போட்டியை சமன் செய்தால் இத்தொடரை இங்கிலாந்து அணி வெல்வது இயலாத காரியமாகும். ( ENG vs WI 2nd Test)

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Ian Bishop.

Scorecard:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat