மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் ஆர்சனல் அணி 2 – 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று FA Emirates கோப்பையின் இறுதி சுற்றுக்கு நுழைந்துள்ளது. FA Cup
நேற்று நடந்த போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியே வெற்றி பெறும் என்று பலர் கணித்திருந்தனர். ஆனால் ஆர்சனல் அணி அனைத்து கணிப்புகளையும் மீறி 2 – 0 என்ற கணக்கில் மான்செஸ்டர் அணியை வீழ்த்தி உள்ளது. Aubameyang 19வது நிமிடம் மற்றும் 71வது நிமிடங்களில் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். FA Cup
10 நாட்களுக்கு முன் பல சிறு அணிகளிடம் தோல்வியை தழுவிய ஆர்சனல் அணி, இந்த வாரத்தில் பிரீமியர் லீக் சாம்பியனான லிவர்பூல் அணியையும், தலைசிறந்த அணியான மான்செஸ்டர் சிட்டி அணியையும் வீழ்த்தி உள்ளது. FA Cup
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செல்சி அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொள்கின்றது. இப்போட்டியில் வெல்லும் அணி ஆகஸ்டு 1ஆம் தேதி ஆர்சனல் அணியை எதிர்கொள்ளும். FA Cup
For more sports news click here and click here