Eng vs WI 2nd Test Day 1: டாமினிக் சிப்லி மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டம்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. 

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர்கள் நன்றாக விளையாடினாலும் உணவு இடைவேளையின் கடைசி பந்தில் Rory Burns 15 ரன்களுக்கு ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் உணவு இடைவேளை முடிந்து வந்த முதல் பந்திலேயே Zak Crawley டக் அவுட்டாக இங்கிலாந்து அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரூட் மற்றும் டாமினிக் சிப்லி கணிசமான ரன்களைக் குவிக்க கேப்டன் ரூட் 23 ரன்களுக்கு ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  Eng vs WI 2nd Test

அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் டாமினிக் சிப்லியிடம் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. டோமினிக் சிபிளி 86 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில்   ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோசப் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். Eng vs WI 2nd Test

முதலாம் நாள் அலசல்:

இங்கிலாந்து அணி: ஆட்டத்தின் தொடக்கத்தில் சில விக்கட்டுகளை இழந்தாலும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டோமினிக் சிப்லேயின் நிதானமான ஆட்டம் இங்கிலாந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் ஜேசன் ஹோல்டர் பந்துகளில் சிறிது தடுமாறினாலும் விக்கெட்டுகளை கொடுக்காமல் இருந்தது நல்ல விஷயமாக அமைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி: ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுத்தாலும், பின்னர் விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. முதல்நாள் ஆட்டத்திலேயே மழை காரணமாக பிட்சில் சில உடைப்புகள் இருந்தபோதிலும் மோசமான பீல்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சு இல்லாததால் மேற்கிந்தியத்தீவுகள் அணியால் விக்கெட்டுகளை கைப்பற்ற இயலவில்லை. Eng vs WI 2nd Test

இரண்டாம் நாள் கணிப்பு

இங்கிலாந்து அணி: 126 ரன்களுடன் ஆடிவரும் இந்த கூட்டணி விக்கெட்டுகளை இழக்காமல் உணவு இடைவேளை வரை ஆடி வந்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஒரு பெரிய ரன்களை குவிக்க இயலும். 

மேற்கிந்திய தீவுகள் அணி: ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுக்களை எடுத்தால் மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணியால் இப்போட்டியில் முன்னிலை பெற இயலும். முதல் நாள் ஆட்டத்தில் செய்த பல்வேறு தவறுகளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் திருத்திக் கொள்ளும் கட்டாயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது. Eng vs WI 2nd Test

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Carlos Brathwaite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat