இங்கிலாந்து அணியை காப்பாற்றுவாரா ஜோ ரூட் – இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது (ENG vs WI 2nd Test)

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்க உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இப்போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இப்போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (ENG vs WI 2nd Test)

முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பல்வேறு தவறுகளை மேற்கொண்டது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்த பென் ஸ்டோக்ஸ் பல்வேறு தவறான முடிவுகளை எடுத்தது அணிக்கு தோல்வியைத் தேடித் தந்தது. இங்கிலாந்து அணியின் பீல்டிங்கும் அப்போட்டியில் சுமாராகவே இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை முதலாவது டெஸ்ட் போட்டியில் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக மேற்கொண்டனர். தகுந்த நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்தும் தேவையான நேரத்தில் ரன்களைக் குவித்தும் அபார வெற்றியை படைத்தனர். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் இப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்று நினைக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுவதால் இப்போட்டி அனல்பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. (ENGvs WI 2nd Test)

அணி விவரம்:

இங்கிலாந்து அணி:

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பங்கேற்காத நிலையில் இப்போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மார்க் உட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் கிறிஸ் ஒக்ஸ் அல்லது சாம் கரண் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் Joe Denly கடந்த சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவர் இப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் இப் போட்டியில் பங்கேற்பது உறுதியாகி உள்ளதால் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது.(ENG vs WI 2nd Test)

England Squad: Rory Burns, Dominic Sibley, Zak Crawley, Joe Root(c), Ben Stokes, Ollie Pope, Jos Buttler(w), Sam Curran, Dominic Bess, Jofra Archer, Stuart Broad, Chris Woakes, Ollie Robinson

மேற்கிந்திய தீவுகள் அணி:

முதலாவது டெஸ்ட் போட்டியில் அனைத்துவிதமான துறையிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளதால் இந்திய தீவுகள் அணி இப்போட்டியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது என்று கருதப்படுகின்றது. 

West Indies Squad: Kraigg Brathwaite, John Campbell, Shai Hope, Shamarh Brooks, Roston Chase, Jermaine Blackwood, Shane Dowrich(w), Jason Holder(c), Rahkeem Cornwall, Kemar Roach, Shannon Gabriel, Alzarri Joseph, Chemar Holder, Raymon Reifer, Nkrumah Bonner

வானிலை:

இப்போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் சிறிது மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகின்றது.(ENG vs WI 2nd Test)

பிட்ச் மற்றும் மைதானம்:

இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவே கருதப்படுகின்றது. மூன்று நாட்களுக்கு பிட்சில் பந்து நன்றாக எழும்பி வரும் என்றும் பின்னர் ஆட்டம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே தீர்மானிக்கும் என்று கருதலாம். (ENG vs WI 2nd Test)

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Michael Gough

வர்ணனையாளர்கள்: Nasser Hussain, M.Holding, Sir Alastair Cook, Carlos Brathwaite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat