சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். 862 புள்ளிகள் பெற்றுள்ள ஹோல்டர், கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு மேற்கிந்திய தீவு அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இப்புள்ளியை நெருங்கவில்லை.(ICC Ranking)
மேற்கிந்திய தீவுகள் சார்பில் அதிகபட்சமாக கோட்லி வால்ஸ் 866 புள்ளிகள் பெற்றிருப்பதே அதிகபட்சம் ஆகும். முதலிடத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் தக்க வைத்துள்ளார்.(ICC Ranking)
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் முதலாவது இடத்திலும், இந்திய அணி கேப்டன் விராட்கோலி இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் 485 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 431 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். (ICC Ranking)
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (16 ஜூலை) தொடங்க உள்ள நிலையில் இப் புள்ளி பட்டியலில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுகின்றது. (ICC Ranking)
For more sports news click here and click here