ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த ஆண்டிற்கான BigBash தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் இத்தொடர் பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் மெல்பேர்ன் ரணிகெட் அணியும் அடிலைட் ஸ்டிக்கர்ஸ் அணியும் மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இத்தொடர் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாகவும் இத்தொடரை நல்லமுறையில் நடத்துவது எங்கள் கடமை எனவும் கூறியுள்ளார்.இத்தோடு பெண்களுக்கான BigBash தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக டி20 உலகக்கோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் BigBash தொடருக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
For more sports news click here and click here