சவுத்அம்ப்டன் நகரில் கடந்த ஜூலை எட்டாம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய #Raisethebat தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்ய இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 318 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை விட 114 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்தங்கிய நிலையில் மூன்றாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து இருந்தது.இந்நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
நான்காவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை விட்டது. Kraigg Brathwaite 4 ரன்களுக்கும் Shai Hope 9 ரன்களுக்கும் Brooks ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற மேற்கிந்திய தீவுகள் அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த Chase மற்றும் Blackwood பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்க மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது. இந்தக் கூட்டணி நான்காவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தது. Chase 37 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, Dowrich உடன் கூட்டணி சேர்ந்த Blackwood அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட Blackwood, 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் Jofra Archer 3 விக்கெட்டுகளும் Ben Stokes 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மூன்று போட்டிகளை கொண்ட இத்தொடரில் மேற்குஇந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் ஆய்வு
மேற்கிந்திய தீவுகள் அணி:
கடந்த ஒரு மாதம் முன்னரே இங்கிலாந்து வந்து மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து வானிலைக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டதே இப்போட்டியில் வெல்ல உறுதுணையாக இருந்தது.
எப்பொழுதும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பந்துகளை கவனிக்காமல் விளையாடுவது வழக்கம். ஆனால் இப்போட்டியில் மோசமான பந்துகளை மட்டுமே விளையாடிய அவர்கள் நல்ல பந்துகளை விட்டது இப்போட்டியின் வெற்றிக்கு வித்திட்டது.
கடந்த சில போட்டிகளாக மோசமாக பந்துவீசிய செனான் கேப்ரியல், இப்போட்டியில் தனது Formஐ மீட்டு 9 விக்கெட்டுகளை எடுத்தது மேலும் பலத்தை சேர்த்தது.
இங்கிலாந்து அணி:
இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்தபோதிலும் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது பெரும் சொதப்பலாக அமைந்தது. மேலும் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் அணியில் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு மேலும் பலவீனத்தை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க தவறியதால் மேற்கிந்திய தீவு அணிக்கு ஒரு பெரிய இலக்கு நிர்ணயிக்க முடியவில்லை.
ஐந்தாவது நாளில் Over Cast condition இல்லாத பொழுது சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தர இயலும். ஆனால் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான Dom Bess சரியாக பந்து வீசாதது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக ஐந்தாவது நாளில் பிட்சில் உள்ள Rough Patches களை பயன்படுத்தி சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பது வழக்கம். ஆனால் Dom Bess அதை கவனிக்காமல் பந்து வீசியது அணியின் தோல்விக்கு வித்திட்டது.
#Raisethebat டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி 16ஆம் தேதி old Trafford மைதானத்தில் தொடங்க உள்ளது .
For more sports news click here and click here
Like!! Really appreciate you sharing this blog post.Really thank you! Keep writing.
Hi! I know this is somewhat off-topic however
I needed to ask. Does operating a well-established
website like yours require a large amount of work? I am
completely new to blogging but I do write in my diary every day.
I’d like to start a blog so I can share my experience and
views online. Please let me know if you have any suggestions or tips
for new aspiring bloggers. Appreciate it!
My web page; CBD for sale
I got this website from my pal who told me about this web site and at the moment this
time I am browsing this website and reading very informative content at this place.
What’s Going down i’m new to this, I stumbled upon this I’ve discovered It positively helpful and it has
helped me out loads. I’m hoping to contribute & assist different users like its helped
me. Great job.
I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is needed to get set up?
I’m assuming having a blog like yours would cost a pretty penny?
I’m not very web savvy so I’m not 100% sure.
Any suggestions or advice would be greatly appreciated.
Cheers
I have read a few excellent stuff here. Certainly worth bookmarking for
revisiting. I wonder how so much attempt you set to create one of these wonderful informative site.