Eng vs WI 1st Test: நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலையில் உள்ளது

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகின்றது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 284 – 8 ரன்கள் எடுத்துள்ளது. 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 15 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் Rory Burns and Dom Sibley முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் குவித்தனர். Joe Denly 29 ரன்களுக்கும் பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய Zak Crawley 76 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி நல்ல முன்னிலை பெற்றிருந்தது. இருப்பினும் கடைசி Sessionனில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி தொடர்ந்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து நான்காம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் செனான் கேப்ரியல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (Eng vs Wi 1st Test )

நான்காம் நாள் ஆய்வு:

இங்கிலாந்து அணி:

4 ஆம் நாள் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து வீரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக விளையாடி வந்தனர். முக்கியமாக தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான பந்துகளை மட்டுமே ரன்களாக மாற்றினர். இளம் வீரரான Zak Crawley, மேற்கிந்திய தீவுகள் அணியின் சூழ்ச்சிகளுக்கு சிக்காமல் களத்தில் நின்றது இங்கிலாந்து அணிக்கு பலத்தை சேர்த்தது. இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் மேற்கிந்திய தீவுகள் அணியின் கைகள் மீண்டும் ஓங்க தொடங்கியது. Eng vs Wi 1st Test

மேற்கிந்திய தீவுகள் அணி:

மேற்கிந்திய தீவுகள் அணி நான்காவது நாள் ஆட்டம் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்காதது சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது.  மேற்கிந்திய தீவு அணிகளின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு ரன்களை கொடுக்க இங்கிலாந்து அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தன. Eng vs Wi 1st Test

ஐந்தாம் நாள் கணிப்பு

இங்கிலாந்து அணி:

வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணிக்கு இன்னும் 30 முதல் 50 ரன்கள் தேவைப்படுகின்றன. அதுவும் ஆட்டம் தொடங்கிய 10 முதல் 15 ஓவர்க்குள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தல் வேண்டும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் புது பந்தில் 2-3  விக்கெட்டுகளை எடுத்து பின்னர் Dom Bess நன்றாக பந்து வீசினால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.Eng vs Wi 1st Test

மேற்கிந்திய தீவுகள் அணி:

இங்கிலாந்து அணியை 200 ரன்கள் முன்னிலையுடன் சுருட்டி, இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை கவனமாக விளையாடினால் மட்டுமே வெற்றி அல்லது Draw செய்ய இயலும். நான்காம் நாள் ஆட்டத்திலேயே pitchயில் Rough Patches உருவானதால் சுழல் பந்துவீச்சை உன்னிப்பாக கவனித்து ஆடுவது முக்கியம். Eng vs Wi 1st Test

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Richard Kettleborough

வர்ணனையாளர்கள் : Michael Vaughan, Guha, Sir Alastair Cook, Carlos Brathwaite.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat