ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்ற பிறகே தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் அறிவித்துள்ளார்.
வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் உலகக்கோப்பை வெல்வதே எனது கனவாகும் என்றும் அதன் பின்னரே தனக்கு திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 21 வயதாகும் உலகின் முதல்தர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றார். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்களில் இவரும் ஒருவர். கடந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி ஒன்பது போட்டிகளிலும் தோல்வியை கண்டது.
For more sports news click here and click here