Laliga 2020 : D Alaves அணியை வீழ்த்தி கோப்பைக்கு அருகே சென்றது ரியல் மாட்ரிட் அணி

ஸ்பெயினில் நடக்கும் Laliga Santander கால்பந்து தொடரில் D Alaves அணியை 2 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி ரியல்மாட்ரிட் அணி வெற்றி. பென்சிமா பத்தாவது நிமிடத்திலும் Asensio ஐம்பதாவது நிமிடத்திலும் ரியல் மேட்ரிட் அணிக்காக கோல் அடித்தனர்.

Laliga கால்பந்து தொடரை பொறுத்தவரை பார்சிலோனா, ரியல் மேட்ரிட். அட்லடிகோ மடிரிட் அணிகளே ஆதிக்கம் செலுத்தும். ஆனால் கொரோன பொது முடக்கத்திற்கு முந்தைய காலத்தில் பார்சிலோனா அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கத்திற்கு பின்பு நடக்கும் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணி வேறு ரூபத்தை காட்டி வருகின்றது. பொது முடக்கத்திற்கு பின்பு நடந்த 8 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் பார்சிலோனா அணியும் கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாததால் ரியல்மாட்ரிட் அணி முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த Laliga தொடரில் ரியல்மாட்ரிட் அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் மிச்சமுள்ள நிலையில் நான்கு புள்ளிகளை பெற்றால் ரியல்மாட்ரிட் அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat