இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.( Eng vs WI )
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 57/1 ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. மூன்றாம் நாள் தொடக்கத்தின் முதல் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் மிகவும் பக்குவமாக இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விளையாடி வந்தனர். அரை சதம் விளாசிய Kragg Brathwait, பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரோஸ்டன் சேஸ், Brooks ஆகியோர் தங்கள் பங்கிற்கு. ரன்களை குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் Dowrich 61 ரன்கள் குவிக்க மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ( Eng vs WI )
இதைத் தொடர்ந்து 114 ரன்கள் பின்தங்கி மூன்றாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் Don Sibley 5 ரன்களுடனும் Rory Burns 10ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.( Eng vs WI )
நான்காம் நாள் கணிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணி: 9 ரன்களுடன் முன்னிலையில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்ட் போட்டியிலும் முன்னிலையில் உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் நான்காவது நாள் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் துல்லியமாக பந்துவீசி இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைப்பது அவசியம். ( Eng vs WI )
இங்கிலாந்து அணி: 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணிக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது நாள் ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் மேற்கிந்திய தீவுகள் அணியை விட 200 – 250 முன்னிலை பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இயலும்.( Eng vs WI )
நேரம் : மாலை 3.30.
நேரலை தொலைக்காட்சி : Sony Six, Sony Six HD
நடுவர்கள் : Richard Illingworth, Richard Kettleborough
வர்ணனையாளர்கள் : Michael Vaughan, Guha, Sir Alastair Cook, Carlos Brathwaite.
For more sports news click here and click here