Eng vs WI 1st Test: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 57/1 ரன்கள் பெற்றுள்ளது

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 57/1 ரன்கள் பெற்றுள்ளது. முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சவுத்அம்ப்டன் நகரில் ஜூலை எட்டாம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். மழை காரணமாக முதல் நாளில் 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 35/1 என்ற கணக்கில் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. இரண்டாம் நாளும் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, குறுகிய இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜோ டென்லி, Rory Burns, Zak Crawley, Ollipe Pope ஆகிய வீரர்கள் நடையை கட்ட இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியை சந்தித்தது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் கூட்டணி அணியை மோசமான நிலையில் இருந்து மீட்டது. இருப்பினும் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் குவித்தார். மேற்கு இந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை ஜேசன் ஹோல்டர் ஆறு விக்கெட்டுகளையும் செனான் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 54/1 என்ற ரன்களை பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜான் கேம்பெல் 28 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, Kraigg Braithwaith 20 ரன்களுடனும் Shai Hope மூன்று ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூன்றாம் நாள் கணிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை இரண்டாம் நாள் கடைசி session னில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு இல்லாததால் மைதானம் பேட்டிங செய்ய சாதகமாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை விட 100 – 150 ரன்கள் முன்னிலை பெருவது கட்டாயமாகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இரண்டாவது நாள் ஆட்டம் இறுதியில் 3 விக்கெட்டுகளை ஆவது கைபெற்றிருக்க வேண்டும். ஆனால் மேற்குஇந்திய தீவுகள் அணியின் நல்ல பேட்டிங் அதை ஒரு விக்கெட்டாக குறைத்தது. இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர தொடக்கத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் மிகவும் முக்கியமாக தேவைப்படுகின்றன. மேற்கிந்திய தீவுகள் அணியை 200 ரன்களுக்குள் சுருட்டுவதே இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் கடமையாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றால் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்திப்பதை தவிக்க இயலாது.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Richard Kettleborough

வர்ணனையாளர்கள் : Michael Vaughan, Guha, Sir Alastair Cook, Carlos Brathwaite.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat