இங்கி vs மே.இ தீவுகள் முதல் டெஸ்ட் போட்டி – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 35 /1 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 35/1 என்ற ரன்களை குவித்துள்ளது. மழை  காரணமாக அவ்வப்போது தடைப்பட்ட ஆட்டத்தால் நேற்றைய நாளில் வெறும் 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

இந்திய நேரப்படி நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்க இருந்த ஆட்டம் மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். மழை மற்றும் மைதான நிலை காரணமாக இப்போட்டியில் ஸ்டுவர்ட் பிராட் க்கு பதிலாக மார்க் வுட் பங்கேற்பார் என்று அறிவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை எந்த ஒரு முழுநேர சுழல் பந்துவீச்சளரும் இல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே செல்வதாக மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் அறிவித்தார்.

ஆட்டம் தொடங்கிய பத்தாவது பந்திலேயே இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான Dom Sibley, செனான் கேப்ரியல் பந்தில் கிளீன் போல்ட் ஆக இங்கிலாந்து அணி ரன் எதுவும் எடுக்காமல் தனது முதல் விக்கெட்டை இழந்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக தடைபட்டது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. Rory Burns 20 ரன்களுடனும் Joe Denly 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரண்டாம் நாள் கணிப்பு

இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால் ஆட்டம் தடைபட அதிக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இப்போட்டியில் இல்லாததால் இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கை வெளிப்படுத்தும். 

மேற்கிந்திய தீவுகள் அணியை பொறுத்தவரை நாளின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணியின் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் முக்கியமாகும். ஆட்டம் மூன்றாவது நாளுக்கு செல்லும்போது பிட்ச் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமையும் என்பதால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றுவது கட்டாயம்.

நேரம் : மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

நடுவர்கள் : Richard Illingworth, Richard Kettleborough

வர்ணனையாளர்கள் : Michael Vaughan, Guha, Sir Alastair Cook, Carlos Brathwaite.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat