ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக ஆசிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைப்பதாகவும் 2022ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டிற்கான ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பு காரணமாக இலங்கைக்கு மாற்றப்பட்டது.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat