இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – ஒரு அலசல்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறாத நிலையில், இன்று தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். (England vs West Indies First Test Preview)

மேற்கிந்திய தீவுகள் அணிகள் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்தடைந்தது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், தங்களது பயிற்சியையும் ஒரு மாத காலமாக மேற்கொண்டு வந்தனர். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தங்களுக்குள்ளே பயிற்சி போட்டிகளையும் விளையாடி வந்தனர். கடந்த ஒரு மாத கால பயிற்சிக்குப் பின் இரு அணி வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி உள்ளனர். (England vs West Indies First Test Preview)

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு புது விதிமுறைகள் இப்போட்டியில் இருந்து கடைபிடிக்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறிப்பாக, பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் தங்களது கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.(England vs West Indies First Test Preview)

அணிகள் ஆய்வு

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து கேப்டனான ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலாத காரணத்தினால், பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான சாம் கரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இப்போட்டியில் இடம்பெறவில்லை. 

கடந்த ஆறு மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான Rory Burns அணிக்கு திரும்பியது இங்கிலாந்து அணிக்கு பலத்தை கொடுத்துள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இப் போட்டியில் பங்கேற்காத காரணத்தினால், அவரிடத்தில் இளம் வீரரான Zak Crawley இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த Jofra Archer அணிக்கு திரும்பியது இங்கிலாந்து வேகப்பந்து கூட்டணிக்கு பெருத்த பலத்தை சேர்த்துள்ளது.(England vs West Indies First Test Preview)

West Indies Squad: John Campbell, Kraigg Brathwaite, Shai Hope, Shamarh Brooks, Roston Chase, Jason Holder(c), Shane Dowrich(w), Rahkeem Cornwall, Alzarri Joseph, Kemar Roach, Shannon Gabriel, Chemar Holder, Nkrumah Bonner, Raymon Reifer, Jermaine Blackwood

மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணி பலம் குறைந்த அணியாக தென்பட்டாலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர்களின் செயல்பாடு நன்றாகவே அமைந்துள்ளது. குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட்டணி எதிரணியை திக்குமுக்காட செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான செனான் கேப்ரியல் அணியில் இடம் பெற்றுள்ளது நல்ல பலத்தை கொடுத்துள்ளது. பேட்டிங்கில் பொருத்தவரை பலவீனமாக இருந்தாலும், பல்வேறு இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளது அந்த அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஜேசன் ஹோல்டரின் கூர்மையான பந்துவீச்சும் துணிச்சலான பேட்டிங்கும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு சற்று தலை வலியாகவே இருக்கும். (England vs West Indies First Test Preview)

England Squad: Rory Burns, Dominic Sibley, Joe Denly, Zak Crawley, Ben Stokes(c), Ollie Pope, Jos Buttler(w), Dominic Bess, Jofra Archer, Stuart Broad, James Anderson, Chris Woakes, Mark Wood

வானிலை : 

சவுத்தாம்ப்டன் நகரில் இரண்டு நாட்களுக்கு சற்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழை காரணமாக சற்று தடைப்பட வாய்ப்புள்ளது.

டாஸ் மற்றும் மைதானம்

சவுத்தாம்ப்டன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாலும் மழையின் காரணமாக பிட்ச் ஈரப்பதமாக காணப்படுவதாலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (England vs West Indies First Test Preview)

நேரம் : ஜூலை 8, மாலை 3.30.

நேரலை தொலைக்காட்சி : Sony Six,  Sony Six HD

வர்ணனையாளர்கள் : Michael Vaughan, Guha, Sir Alastair Cook, Carlos Brathwaite.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat