இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடக்க இருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோன பாதிப்பு காரணமாக இப்போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஆசிய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவுகள் வருங்காலத்தில் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று இன்ஸ்டாகிராமில் பேட்டியளித்த கங்குலி, இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், இதுகுறித்து சவுரவ் கங்குலிக முடிவெடுக்க எந்த ஒரு அதிகாரமும் இல்லை எனவும் ஆசிய கோப்பை கருத்து குறித்து ஆசிய கிரிக்கெட் வாரியம் மட்டுமே முடிவெடுக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.
சௌரவ் கங்குலி செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதால், ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றாலும் இந்திய அணி பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகின்றது.
For more sports news click here and click here