பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ENG vs PAK

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி Old Trafford மைதானத்தில் தொடங்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ENG vs PAK

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை (July 8) Southampton இல் தொடங்க உள்ளது. இத்தொடர் மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்டதாகும். இந்த தொடர் முடிந்தவுடன் அயர்லாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பங்குபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ENG vs PAK

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் என்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி Old Trafford மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ENG vs PAK

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் விரைவில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் குறிப்பிட்டுள்ளார். ENG vs PAK

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat