இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் ஐஎஸ்எல் (ISL) 7வது சீசன் சென்னையில் நடைபெற போவது இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 7 வது சீசனில் அனைத்து போட்டிகளும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களாக தடைப்பட்டு இருந்தன. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ளன, இருப்பினும் பார்வையாளர்கள் இன்றைய ஆட்டங்கள் நடைபெறுகின்றது.(ISL)
இந்தியாவில் தற்போது எந்த ஒரு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுவதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐஎஸ்எல் ஏழாவது சீசன் நவம்பர் 21ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறும் நிலையில் ஐஎஸ்எல் போட்டிகளை பல மாநிலங்களில் நடத்துவது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் கேரளா, கோவா, மேற்கு வங்காளம் அல்லது வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நான்கு மாநிலங்களில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் அனைத்துப் போட்டிகளையும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஐஎஸ்எல் நிர்வாகத்திடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (ISL)
மேலும் வரும் ஐஎஸ்எல் சீசனில் இருந்து ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட இயலும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. இதனால் பல்வேறு இந்திய வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.(ISL)
For more sports news click here and click here