இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனுக்கு ( Sam Curran )கோரோன தொற்று இல்லை – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிம்மதி.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனுக்கு ( Sam Curran ) கோரோன தொற்று இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உடம்பு வலி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த சாம் கரனுக்கு ( Sam Curran ) நேற்று கோரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, இதில் அவருக்கு கோரோன தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக உடம்பு ஒவ்வாமை காரணமாக அவதிப்பட்டு வந்த சாம் கரண்( Sam Curran ), தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு ,இங்கிலாந்து அணிக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் பங்கேற்க வில்லை. இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள சாம் கரன்( Sam Curran ), தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் வரும் எட்டாம் தேதி தொடங்க உள்ள இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன், அனைத்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு வீரர்கள் கடைசியாக ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

For more sports news click here and click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat