“47 days: The Mystery Unfold” Telugu Mystery Thriller Movie Tamil Review

பிரதீப் இயக்கத்தில் சத்யதேவ், ரோஷினி நடிப்பில் ஜூன் 30ஆம் தேதி Zee 5 தளத்தில்  தெலுங்கு Mystery Thriller படமாக வெளிவந்த ” 47 days: The Mystery Unfold” படத்தின் திரைவிமர்சனம் காண்போம்.

Synopsis:

கதாநாயகனின் மனைவி அவர் கண்முன்னே தற்கொலை செய்து கொள்கிறார், அவர் மனைவி தற்கொலை செய்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதையின் கரு. (47 days)

Overview:

விசாகப்பட்டினத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் கதாநாயகன் தன் காதலியை திருமணம் செய்து வாழ்ந்து வர, திடீரென்று ஒருநாள் அவர் கண்முன்னே அவருடைய மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மிகவும் மன உளைச்சல் அடையும் கதாநாயகனுக்கு காவல்துறை வேலையும் பறிபோகின்றது. இதே சூழ்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெரிய மருந்து நிறுவனத்தின் தலைவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகின்றது. இதை அறியும் கதாநாயகன், தனது மனைவி தற்கொலைக்கும் மருந்து நிறுவன தலைவர் தற்கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக நினைத்து இந்த விஷயத்தை ஆராய தொடங்குகிறார். இறுதியில் இவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று அறிந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.(47 days)

Positives:

Cinemotography:

இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜிகே தனது காட்சி அமைப்பை மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார். விசாகப்பட்டினத்தின் அழகை பிசுரு இல்லாமல் காட்டியது கூடுதல் சிறப்பு.(47 days)

Actors:

இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் மற்றும் நடிகைகள் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். முக்கியமாக படத்தின் கதாநாயகனான சத்யதேவ் தனியாளாக கதையைச் சுமந்து செல்வது கூடுதல் சிறப்பு.(47 days)

Negatives:

Screen play:

இப்படத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக செல்வதால் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு ஆவணமும் இன்றி அமைந்துள்ளது. முதல் இருபது நிமிடத்தில் வேகமெடுக்கும் படம் போகப்போக வேகம் குறைந்து செல்வது இப்படத்துக்கு சற்று மேலாக அமைந்துள்ளது.

Story:

இப்படத்தின் இயக்குனரான பிரதீப் சரியான கதைக்களத்தை பிடித்து கதையை எழுதினாலும், கதை செல்ல செல்ல இயக்குனர் இந்த கதைகள் நன்றாக வடிவமைக்கவில்லையோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது. உதாரணமாக தன் மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன என்று அறிய போராடும் கதாநாயகன், இரண்டாம் பாதியில் அதை விட்டுவிட்டு வேறு வழியாக செல்வதாக கதை அமைப்பு எழுதப்பட்டிருக்கும். இந்த காட்சியமைப்பு நாம் படத்தை பார்க்கும் பொழுது சற்று நெருடலாகவே தோன்றியது.

Age Restrictions :

இப்படத்தில் ஒரு சில ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சிறுவர்கள் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.(47 days)

Rating:

இப்படத்திற்கு நமது குழு சார்பில் 60/100 என்ற மதிப்பெண் வழங்கப்படுகிறது.(47 days)

For Krishna and his Leela review Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat