Bulbbul – Hindi Horror Thriller Movie Tamil Review

Anvitha Dutt இயக்கத்தில் Trimpti Dimri, Avinash Tiwari, Rahul Bose நடித்து Hindi Horror படமாக  Netflix தளத்தில் வெளியான Bulbbul படத்தின் திரை விமர்சனத்தை காண்போம். (Bulbbul Movie Review)

Synopsis: 

லண்டனில் தனது மேற்படிப்பை முடித்துவிட்டு தன் அண்ணன் இருக்கும் ஊருக்கு வரும் கதாநாயகன், வரும் இடத்தில் பல்வேறு அமானுஷ்ய கொலைகள் ஏற்படுகின்றன, இந்தக் கொலைகளை யார் செய்கிறார்கள் என்று கதாநாயகன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதையின் கரு.(Bulbbul Movie Review)

Movie Overview:

1881 ஆம் ஆண்டு பெங்கால் கிராமத்தில் ஒரு சிறுமிக்கு திருமணம் நடைபெறுகிறது. அந்த சிறுமியை திருமணம் செய்யும் ஆணுக்கு ஒரு தம்பியும் உள்ளான். அந்த சிறுமியும் அவளை திருமணம் செய்த கணவனின் தம்பியும் சிறுவயதிலிருந்து ஒன்றாகவே வளர்கின்றனர். காலங்கள் கடந்த பின்னும் இவர்களுக்கு இடையேயான தொடர்பு நீடித்தது. இதைக்கண்ட கதாநாயகனின் அண்ணன், தனது தம்பியை மேற்படிப்பிற்காக லண்டனுக்கு அனுப்பி வைத்தார். படிப்பை முடித்து திரும்பி வரும் கதாநாயகனுக்கு அந்த ஊரில் பல அமானுஷ்ய மரணங்கள் நிகழ்வதை காண்கிறார். இந்த மரணத்திற்கான காரணங்களை கதாநாயகன் கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. இக்கதையின் காட்சியமைப்புகள் Non Linear முறையில் இடம்பெற்றிருக்கும் ஆனால் பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.(Bulbbul Movie Review)

Positives :

  • இக்கதையில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்தனர். மேலும் கதாநாயகியாக வரும் Tripti Dimri தனது நடிப்பின் மூலமாக இப்படத்தை தாங்கி நிற்கின்றார்.
  • இப்படத்தின் காட்சி அமைப்புகள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. Siddharth Diwan ஒளிப்பதிவு  இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை தந்துள்ளது. 
  • இப்படத்திற்கான Sound Design மற்றும் Colour Design சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. 

Negative :

இப்படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரஸ்யம் இன்றி இருந்தது, இப்படத்திற்கு சற்று பின்னடைவை தந்தது.

Age Restrictions :

இப்படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், பெரியவர்கள் மட்டுமே இப்படத்தைக் காண இயலும்.(Bulbbul Movie Review)

Rating:

நமது குழு சார்பில் இப்படத்திற்கு 70/100 மதிப்பெண் வழங்கப்படுகிறது.(Bulbbul Movie Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat