3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதர் அலி, சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகிய மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிரான தொடருக்கான 29 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த 29 வீரர்களும் அடுத்த வாரம் லாகூரில் தங்களது பயிற்சியை தொடங்குவார்கள் எனவும் அதற்கு முன் அனைத்து வீரர்களும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தது.
இந்நிலையில் ராவல்பிண்டியில் நடந்த பரிசோதனையில் ஹைதர் அலி சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவூப் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும் இவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தென்படாததால். இவர்கள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மேலும் அனைத்து வீரர்களும் தங்களது பரிசோதனைகளை முடித்து விட்டனர் எனவும் இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமைகுள் தெரியவரும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat