முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ், பக்கர் ஜமான் உள்ளிட்ட ஏழு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 வீரர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த பத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இவர்கள் 10 பேருக்கும் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றும், இவர்கள் அனைவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணி வரும் 28ஆம் தேதி இங்கிலாந்து செல்லும் நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஸ்வானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் இங்கிலாந்திற்கு செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது |