நிறவெறி கொடுமைக்கு உள்ளாக்கபட்டரா டேரன் சாமி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களால் நிறவெறி கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேரன் சாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை நிறவெறிக் கொடுமைக்கு உண்டாக்கியவர்கள் தன்னிடம் மன்னிப்பு கோரவில்லை என்றால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டனும் இரண்டு முறை டி20 உலக கோப்பை வெற்றி கேப்டனாகவும் இருக்கும் சாமி 2013 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். அப்பொழுது அங்கிருந்த ஐதராபாத் வீரர்கள் சிலர் அவரையும் ஸ்ரீலங்கா அணியின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேராவையும் கலு என்ற தெலுங்கு வார்த்தையால் அழைத்ததாகவும் கூறியுள்ளார். அந்த வார்த்தையை கூறி அழைக்கும் பொழுது அனைவரும் தன்னை பார்த்து சிரிப்பார்கள் என்றும், ஏதோ விளையாட்டுக்காக தன்னை அப்படி அழைக்கிறார்கள் என்று நான் அந்த விஷயத்தை விட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த வார்த்தையின் பயன்பாடு அதிகரித்ததால் இந்த வார்த்தையின் அர்த்தத்தை என் நண்பர்களிடம் இருந்து அறியும் பொழுது தான் அது ஒரு நிறவெறி வார்த்தை என்பதை உணர்ந்தேன்.
மேலும் அந்த வீரர்களின் பெயரை தான் கூறப்போவதில்லை என்றும் ஆனால் அந்த வீரர்கள் தன்னிடம் தனியாக வந்து மன்னிப்பு கேட்டால் இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடுவதாக சாமி அறிவித்துள்ளார்.ReplyForward

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat