தேவைப்பட்டால் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் : வஹாப் ரியாஸ்

பாகிஸ்தான்  டெஸ்ட் அணிக்கு என்னுடைய தேவை ஏற்பட்டால்  மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று  பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்  தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்  தனது பல்வேறு தனிப்பட்ட விஷயத்திற்காக மட்டுமே  டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வகாப் ரியாஸ்  மற்றும் முகமது அமீர்  கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து  விலகுவதாக  அறிவித்தனர்.  இந்த செய்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டிற்கான பாகிஸ்தான் சம்பளம்  ஒப்பந்தத்திலிருந்து வஹாப் ரியாஸ்  மற்றும்  முகமது ஆமீர் பெயர்கள்  அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இன்னிலையில் வஹாப் ரியாஸ்,  தன் தேவை  டெஸ்ட் போட்டிகளில் தேவைப்பட்டால்  நிச்சயம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பேன்  என்று தெரிவித்துள்ளார்.

 கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி இளம் வீரர்களை கொண்டே களமிறங்கி வந்துள்ளது  அதனால் வஹாப் ரியாஸின்  இந்த அறிவிப்பு  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு  ஒருமகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. 34 வயதாகும் வஹாப் ரியாஸ்  27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat