பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல இடத்துக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது விளையாட்டுச்செய்திகள் குழு சார்பாக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துகிறோம்.